என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திண்டுக்கல் லியோனி"
தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கோவை மதுக்கரையில் நேற்று இரவு பிரசாரம் செய்தார்.
பிரதமர் மோடி போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டி பேசினார். அப்போது அங்கு நின்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் லியோனி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பாரத் மாதா கீ ஜே’ என கோஷம் எழுப்பினார்.
இதனால் ஆவேசமடைந்த தி.மு.க.வினர் அவரை விரட்டினர். அப்போது தி.மு.க.வினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அங்கு பதட்டமான சூழல் நிலவியது. பாலசுப்பிரமணியத்தை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதாவினர் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.இது தொடர்பாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் என்பவர் மதுக்கரை போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் முறையான அனுமதி பெற்று தேர்தல் பிரசாரம் நடந்த போது, மதுக்கரை 1-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ராசு என்ற செல்வராஜ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதேபோல மதுக்கரை காந்திநகரை சேர்ந்த சத்திய பிரகாஷ் என்பவரும் போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், திண்டுக்கல் லியோனி தனது பிரசாரத்தில் பாரத பிரதமரையும், இந்து கடவுள்களையும் அவதூறாக பேசினார். அப்போது அங்கு நின்ற பாலசுப்பிரமணியத்தை 3 பேர் மிரட்டி தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இருதரப்பு புகார்களையும் பதிவு செய்து கொண்ட போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #DindigulLeoni
தர்மபுரி:
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி தர்மபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி, அரூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வேனில் சென்று பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க.விடம் பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் ராமதாஸ் அடகு வைத்துவிட்டார். பா.ம.க.வை நம்பி இருக்கும் மக்களுக்கு அவர் துரோகம் செய்துவிட்டார். 8 வழிச்சாலை, நீட் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அன்புமணி அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்து உள்ளார். 200 மாணவர்களின் கேள்விக்கு விடை கொடுத்த டாக்டர் அன்புமணியால் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.
தமிழின போராளியாக போராடிய ராமதாஸ் இன்றைக்கு மோடியோடு கூட்டணி வைத்து ‘பாரத் மாதாஹி ஜே’ என்று கோஷம் போடுகிறார்.
தமிழகத்தில் முனியாண்டி விலாஸ் கிளை இருக்கும் அளவிற்கு கூட பா.ஜனதாவின் கிளைகள் கிடையாது. நாட்டின் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று தெரிவித்த மோடி ஒருவருக்கும் கூட அதை போடவில்லை. ஏமாற்றி விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார். #dindigulleoni #ramadoss #modi
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தி.நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் அவதூறாக பேசினார். மேலும் தமிழக அரசு பற்றியும் விமர்சனம் செய்தார்.
இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மேகலை பாண்டிபஜார் சட்டம்-ஒழுங்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். #dindigulLeone #edappadipalanisamy
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி மேல வாணியத்தெருவில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி கழகச் செயலாளர் என்.நாசர் தலைமை தாங் கினார்.
கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். அப்போது அவர் பேசியதாவது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு யாருக்கும் சொந்தம் என்பதே இதுவரை தெரியவில்லை. ஆனால் தி.மு.க.தலைவர் கருணாநிதி திரைப்படத்தில் கதை- வசனம் எழுதி சம்பாதித்து கட்டிய தனது கோபாலபுரம் வீட்டை தனக்கு பிறகு மருத்துவமனை அமைக்க எழுதி கொடுத்துள்ளார்.
சாதி மதங்களை கடந்து தமிழக மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கியவர் கருணாநிதி தான். அதற்கு எடுத்துக்காட்டாக தான் தமிழக முழுவதும் சமத்துவ புரங்களை உருவாக்கினார்.
மு.க.ஸ்டாலின் நாடகம் போடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் உண்மையிலேயே நாடகமாடியவர்கள் தற்போதுள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தான். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது வாய்விட்டு கதறி கண்ணீர் சிந்தியபடி பதவி ஏற்ற அவர்கள் ஜெயலலிதா இறந்தபிறகு ஒரு சொட்டுக் கூட கண்ணீர் விட வில்லையே.. ஏன்? இது நாடகம் இல்லையா?
தற்போது தமிழக அமைச்சர்கள் ஆட்சி எப்போது கவிழுமோ என்ற பயத்தில் உள்ளனர். இதனால் தான் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றனர். இது தமிழ்நாட்டுக்கு நல்ல தல்ல.
இவ்வாறு அவர் பேசினார். #DMK #Dindigulleoni
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்